search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மீட்பு"

    நாகர்கோவில் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே கேசவன்புதூரை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி சரோஜா (வயது 55). இவர், தென்னந்தோப்புகளில் தேங்காய் வெட்டு நடக்கும்போது தேங்காய் எடுப்பதற்காக செல்லும் தொழிலாளி ஆவார். இவர் நேற்று காலை மங்காவிளை நெடுவிளையில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்கு சென்றார். அங்கு வெட்டி போட்ட தேங்காயை எடுத்துக் கொண்டு இருந்தார். தென்னந்தோப்பின் நடுவில் 40 அடி ஆழ கிணறு இருந்தது.

    தேங்காய் எடுத்து கொண்டிருந்த சரோஜா கிணறு இருப்பதை கவனிக்கவில்லை. அதே சமயத்தில் கிணற்றின் தடுப்பு சுவரும் உயரம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் சரோஜா எதிர்பாராதவிதமாக அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. விழுந்த அதிர்ச்சியில் அவர் அங்கேயே மயங்கி விட்டார். இதனால் அவர் கிணற்றில் விழுந்தது, முதலில் யாருக்கும் தெரியாமல் இருந்தது. சிறிது நேரம் கழித்த பின்னர் தான் சரோஜா கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததை சக தொழிலாளர்கள் பார்த்துள்ளனர்.

    பின்னர் இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த சரோஜாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் இறங்குவதற்கு படிக்கட்டுகள் இல்லாததால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.

    40 அடி ஆழ கிணறு

    இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் சரோஜாவை ஒரு வலையில் தூக்கி வைத்து மேலே கொண்டு வந்தனர். இந்த மீட்பு போராட்டம் சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. கிணற்றில் விழுந்ததில் சரோஜாவுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிணற்றில் விழுந்த சரோஜாவை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
    குடும்ப பிரச்சனை காரணமாக திருப்பதி மலை பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் மீட்டனர்.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஜக்கியா பேட்டையை சேர்ந்தவர் நீரா கல்யாண்.

    குடும்பப் பிரச்னை காரணமாக நேற்று காலை 10 மணிக்கு அவர், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக செல்பி வீடியோ மூலம் போலீசாருக்கு தகவல் அனுப்பி பின்னர் மாயமாகி விட்டார்.

    செல்பி வீடியோவை ஆய்வு செய்த போலீசார் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வழியில் நடைபாதை அருகே உள்ள அவாச்சாரி கோனை பள்ளத்தாக்கில் அவர் தற்கொலைக்கு முயன்றதை அறிந்து அங்கு தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் இளம்பெண்ணை தேடினர்.

    5 மணி நேரம் தீவிர தேடலுக்குப் பின்னர் பள்ளத்தாக்கில் 60 அடி ஆழம் உள்ள இடத்தில் காயங்களுடன் நீராகல்யாணி மயங்கிக்கிடந்தார். மரங்களில் சிக்கியதால் அவர் உயிர் பிழைத்தார்.

    அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    குரேஷிய கடல் பகுதியில் சென்ற பயணிகள் கப்பலில் இருந்த பெண் ஒருவர் கடலில் தவறி விழுந்ததை அடுத்து 10 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டார். #Cruise #Passenger #rescued
    குரேஷியா:

    நார்வே நாட்டின் வர்கரோ லாவில் இருந்து வெனீஸ் நகருக்கு பயணிகள் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    குரேஷிய கடல் பகுதியில் சென்றபோது கை லாங்ஸ்டாப் என்ற பெண் பயணி கப்பலின் கூரை பகுதிக்கு ஏறினார்.

    அப்போது கால் வழுக்கி கடலில் விழுந்து விட்டார். அதை கப்பலில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. கை லாங்ஸ்டாப் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.



    சுமார் 10 மணி நேரமாக தத்தளித்துக் கொண்டிருந்த அவரை அந்த வழியாக படகில் சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள் போராடி அவரை மீட்டனர். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் கடலில் 10 மணி நேரம் தத்தளித்துக் கொண்டிருந்தேன். இந்த அற்புதமான மனிதர்கள் என்னை மீட்டார்கள்” என தெரிவித்துள்ளார். #Cruise #Passenger #rescued
    ×